நெருங்கும் பக்ரீத் பண்டிகை களைகட்டும் ஆடு வியாபாரம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது காலை முதலே ஆட்டுச் சந்தையில் குவிந்த இஸ்லாமியர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் 10ஆம் தேதி நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கை அண்டை வீட்டார் களுக்கும் ஒரு பங்கை நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து இந்த பண்டிகையை ஈகை திருநாள் என்று சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
கடந்த 2ஆண்டுகாலமாக கொரோனோ பெருந்தொற்று காரணமாக பக்ரீத் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்த நிலையில் இஸ்லாமியர்கள் பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் காலை முதலே இஸ்லாமியர்கள் ஆடுகள் வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர் இங்கு தரத்துக்கு ஏற்றது போல் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 34 ஆயிரம் ரூபாய் வரை இங்கு ஆடுகள் விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்துள்ளனர் வருகிற ஜூலை 10-ஆம் தேதி நாடெங்கிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் நிலையில் ஆர்வமுடன் இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர் எதிர்பார்த்த அளவைவிட வியாபாரம் நடந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வது வழக்கம்
அந்தவகையில், இந்த வருடத்திற்கான பக்ரீத் பண்டிகை வருகின்ற 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில் இந்த வருடத்திற்கான பக்ரீத் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்காக இஸ்லாமிய பெருமக்கள் தயாராகின்றனர் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
Tags : The approaching Bakrit festival is a weeding goat business