சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூபாய் 10 குறைக்க வேண்டும் மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான விற்பனை விலையை நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவது ஆகும். சர்வதேச விலை உயர்வை அடுத்து உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டது. ஆயினும் உலக அளவில் விலை வீழ்ச்சி அடைந்தது இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் அழைத்து ஆலோசனை நடத்தி உணவு துறை செயலாளர் இதன் சர்வதேச சந்தை விலையை குறைக்க மத்திய அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
Tags :