கணவருடன் கருத்து வேறுபாடு பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..?

by Editor / 25-05-2025 11:39:13pm
கணவருடன் கருத்து வேறுபாடு பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..?

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர், தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் மணகுடியை அடுத்த கீழிருப்பு பகுதியை சேர்ந்தவர் 30வயதான அபிநயா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார்.நாகை ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். வழக்கம் போல, சனிக்கிழமை இரவு பணியில் இருந்த அவர், அதிகாலை 6 மணியளவில் திடீரென்று தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : கணவருடன் கருத்து வேறுபாடு பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..?

Share via

More stories