திமுகவினருக்கு தளபதி எம்எல்ஏ வேண்டுகோள்

by Staff / 24-08-2024 01:26:45pm
திமுகவினருக்கு தளபதி எம்எல்ஏ வேண்டுகோள்

இந்திய தேர்தல் ஆணையம் 01. 01. 2025 ஆம் நாளை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
2025-ன் முன் திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாக்காளர்களை சரிபார்க்க அந்தந்த பகுதியில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி 20. 08. 2024 முதல் தொடங்கப்பட்டு 18. 10. 2024 வரை இந்தப்பணி நடக்கிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விவரங்களையும் சரிபார்ப்பர். 06. 01. 2025 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. எனவே 29. 10. 2024 முதல் 28. 11. 2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள குடிமக்கள் அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைத்தல், இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் படிவங்கள் 6, 6பி. 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம். ஆகவே மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்டக் செயலாளர்கள், பாக நிலை முகவர்கள் (BLA-2) துரிதமாக செயல்பட்டு வாக்காளர்கள் சேர்த்தல் - சரிபார்த்தல் பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories