சூடான குழம்பு கொட்டியதால் குழந்தை பலி

by Staff / 06-09-2023 01:10:00pm
சூடான குழம்பு கொட்டியதால் குழந்தை பலி

விக்கிரவாண்டி அருகே உள்ள சாமியாடிகுச்சிபாளையத்தை சேர்ந்த அய்யப்பன்(வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி புனிதா (30). இவர்களது மகன் கிஷாந்த்(வயது 2½). சம்பவத்தன்று, புனிதா வீட்டில் சமையல் செய்து  ஒரு பாத்திரத்தில் குழம்பு வைத்து கீழே இறக்கி வைத்திருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த  குழந்தைகிஷாந்த், எதிர்பாரதவிதமாக குழம்பு பாத்திரத்தைதட்டிவிட..., சூடான குழம்பு  குழந்தை உடலில் கொட்டியதில் . வலியால் துடிதுடித்த குழந்தையை  சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்குடாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.. இது பற்றி விக்கிரவாண்டி போலீசில்  அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo