கடையநல்லூர் பகுதியில் வாரம் தோறும் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு பொதுமக்கள் பீதி
கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு கடையநல்லூர் மேற்கு பகுதியில் ரஹ்மானியாபுரம் 11வது தெருவில் வசிப்பவர் சலீம் செரீப் (வயது 55). என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூபாய் 30 ஆயிரத்தை . திருடி சென்றனர் அதே இரவில் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்தனர் ஆனால் வீட்டில் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர் .
நேற்று இரவு கடையநல்லூர் பேட்டை பகுதி புளியமுக்கு தெரு மேற்கு பகுதியில் குடியிருக்கும் அபூபக்கர் மகன்அப்துல் காதர் இவர் சொந்தமாக வீட்டில் வைத்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் இவர் இரவில் வீட்டை பூட்டி விட்டு சென்ற பொழுது நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் கதவை உடைத்து வீட்டின் பீரோவிலிருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு சென்றனர் பேட்டை மலம் பாட்டை சாலையில் திருடப்பட்ட பைக்கை கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் அருகே போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.
மற்றொரு வீட்டில் திருட்டு
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டை தெருவில் உள்ள ஷாஜஹான் மகன் அமீர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அருகில் உள்ள தெருவில் ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பல்சர் மோட்டார் சைக்கிளையும் திருடிவிட்டு சென்றது தெரிய வந்தது
சம்பவம் நடந்த இடங்களுக்கு விரைந்து வந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
இரண்டு இடங்களிலும் இரண்டு பைக்குகள் திருடப்பட்ட நிலையில் இரண்டு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்டதும் ஒரே நபரா அல்லது வெவ்வேறு நபர்களா என
போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்
அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றது ஒரே இரவில் இரண்டு பகுதிகளில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :