முகநூலில் கடன் பெற்றுத்தருவதாக ஒரு லட்சம் ரூபாய் மோசடி இருவர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டையைச் சேர்ந்த தில்லைராஜ் என்பவர் முகநூலில் கார் லோன் பெற்று தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு அதில் வந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் கூறியபடி அவர்கள வங்கிக் கணக்கிற்கு 3 தவணையாக 1,7850 ரூபாயை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அவர்களது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது எவ்வித பதிலும் இன்றி செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் தில்லைராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் கோவையை சேர்ந்த சுசாந்திரகுமார் மணிகண்டன் என்கிற இருவரை கைது செய்துள்ளனர்.
Tags : Two arrested for swindling Rs 1 lakh on Facebook