திரௌபதி முர்மு பாஜக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு.

ஒடிசா மாநிலத்திலுள்ள உபர்பேடா என்ற குக்கிராமத்தில் 20 ஜூன் 1958-ம் ஆண்டு பிறந்தவர் திரெளபதி. 25 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர், சிறந்த சட்டமன்ற உறுப்பினர் போன்ற பல சாதனைகளுக்கு உரியவர்.மின்சாரம், சாலை வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளே இல்லாத கிராமம் அது. திரெளபதியின் தந்தை பிரங்ச்சி நாராயண் டுடூ (Biranchi Narayan Tudu) முற்போக்கு சிந்தனையாளர். இவரின் நோக்கம்தான், பின்னாளில் திரெளபதி ஓர் அரசியல் தலைவராக உயர்வதற்கு அடித்தளம் போட்டது.
1997ஆம் ஆண்டு, ராய்ராங்ன்பூர் தொகுதியின் கவுன்சிலராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான ‘நில்கந்தா விருது’ (Nilkandha Award) பெற்றிருக்கிறார்.
கடந்த 2002 முதல் 2004 வரை, ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் தலைமையிலான பா.ஜ.க அரசில், வணிகம் மற்றும் போக்குவரத்து, மீனவ மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் அமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.
இவர் மே 2015 முதல் ஜார்க்கண்டின் 12 சூலை 2021 வரை இம்மாநிலத்தின்எட்டாவது ஆளுநராக இருந்தவர் ஆவார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2000ஆம் ஆண்டு உருவானதிலிருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் இவர் ஆவர். தற்போது 2022ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தல் போட்டியில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Tags : Draupadi Murmu announced as BJP alliance presidential candidate.