காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்படுகிறதா..

by Staff / 28-10-2023 03:07:09pm
 காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்படுகிறதா..

கர்நாடகாவில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதி நடப்பதாக எம்எல்ஏ ரவிக்குமார் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். ரூ.350 கோடியுடன் அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் செய்து இழுக்கப்பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜக முன்னாள் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் முன்னாள் செயலர் சந்தோஷ் இதற்கான பணிகளை செய்து வருவதாகவும், முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவரிடம் இது பற்றி புகார் அளிக்க உள்ளதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories