தீபாவளி சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

by Staff / 28-10-2023 03:08:12pm
தீபாவளி சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 5,920 என மொத்தமாக 16,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கே.கே.நகர். பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

 

Tags :

Share via