பிரதமர் மோடி வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு

by Staff / 06-04-2023 04:34:44pm
பிரதமர் மோடி வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் நரேந்திரமோடி வரும் சனிக்கிழமை (08.04.2023) தமிழகம் வருகிறார். இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்க உள்ளார். இதனால், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத்திறன் ஆண்டுக்கு 2.3 கோடியில் இருந்து 3 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வருகையையொட்டி அப்பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்காக 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo