சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் உயிரிழப்பு,

by Editor / 19-11-2024 11:25:39am
சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் உயிரிழப்பு,

சேலத்தைச் சேர்ந்தவர் மகாதிர் மகமுத் (35). சொந்தமாக ஜிம் வைத்து இருந்தார். தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று மாலை ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, குளியலறை சென்ற நிலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு.குளியலறை கதவை உடைத்து மூச்சு பேச்சின்றி கிடந்த மகாதிர் மகமுத் என்பவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல்அதிகமாக உடற்பயிற்சி செய்த பின், நீராவியில் குளித்த போது மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தகவல்.சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
 

 

Tags : சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் உயிரிழப்பு,

Share via