ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம்

by Editor / 25-03-2023 07:48:11am
 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம்

மதுரை ரயில்வே கோட்டம், பின்வரும் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ஏடிவிஎம்) மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்கும்  பணிக்காக (Facilitator), ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களிடமிருந்து (ஏதேனும் துறை) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

1. மதுரை - 6 பேர்
2. திண்டுக்கல் -5
3. மணப்பாறை-2
4. மானாமதுரை -2
5. பரமக்குடி-1
7.புனலூர் -1
8.கொட்டாரக்கரா -1
9.திருநெல்வேலி-5
10.நாசரேத் -1
11.திருச்செந்தூர்-1
12.விருதுநகர்-2
13.கோவில்பட்டி-2
14.சாத்தூர் -2
15.சிவகாசி-2
16.சங்கரன்கோவில் -1
17.புதுக்கோட்டை-1
18.உடுமலைப்பேட்டை-1
19.பழனி-1
20.கடையநல்லூர் -1
21.கல்லிடைக்குறிச்சி-1
22.செங்கோட்டை-3
23.சேரன்மகாதேவி-1
24.கீழ புலியூர்-1
25.அம்பாசமுத்திரம் -1
 26.பாவூர் சத்திரம்-1
27.தூத்துக்குடி-1
28. வாஞ்சி மணியாச்சி -2

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும்.
மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் பொதுவான நிபந்தனைகள் மேற்கண்ட ரயில் நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளில் உள்ளது.  குறிப்பிட்ட ரயில் நிலையத்தின் அருகில்  குடியிருக்கும்  ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே , அந்தந்த ரயில் நிலையத்தில் உள்ள பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
 
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Sr.Divisional Commercial Manager.Southern Railway DRM Office Madurai-625016 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

 

Tags :

Share via