பள்ளி மாணவர்களை செங்கல் கற்களை தூக்க வைத்த ஆசிரியர்கள்

by Editor / 10-03-2025 04:08:44pm
பள்ளி மாணவர்களை செங்கல் கற்களை தூக்க வைத்த ஆசிரியர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் கொட்டாமேடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து கட்டுமான பணிக்கான செங்கற்களை சுமக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது. பள்ளி மாணவர்கள் சீருடையுடன் செங்கற்களை சுமந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via