தமிழக கேரளா எல்லையில் கனிம வளங்கள் எடுத்துச் சென்ற 3 லாரிகள் பறிமுதல்..
தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 6 சக்கரங்கள் முதல் 22 சக்கரங்கள் வரை உள்ள வாகனங்களில் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு ஏற்றிச் செல்லப்பட்டு வருகின்றன. கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் சில வாகனங்கள் அதிகாலையில் அதிக அளவில் பாரம் ஏற்றி செல்வதும் முறையான ஆவணங்கள் இல்லாமல் செல்வதும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தினமும் 1000க்கும் மேற்பட்ட கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்காகவும், ஆவணங்களை சோதனை செய்வதற்காகவும் கனிமவளத்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் குழுவினர் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர், உதவி இயக்குனர் சத்தியசீலன் தலைமையில் அருள் முருகன், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இங்கிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கேரள மாநிலத்திற்கு ஆறு யூனிட் எம்சாண்ட் ஏற்றி சென்ற லாரியைகனிமவளத்துறை சிறப்பு பிரிவு குழுவினர் எஸ்.வளைவுப்பகுதியில் கண்டறிந்து அந்த லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் லாரியை அங்கே விட்டு விட்டு புளியரை பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டார், இதன் தொடர்ச்சியாக அந்த லாரியை கைப்பற்றிய சிறப்பு பிரிவினர் லாரியின் உரிமையாளர் எடப்பாடியைச் சார்ந்த ராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் இதே போன்று இன்று புளியரை காவல்துறை சோதனை சாவடியில் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் இருந்த பொழுது அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை மறித்து சோதனை செய்த பொழுது அதில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இரண்டு வாகனங்களையும் பிடித்த சோதனைச் சாவடி உதவி ஆய்வாளர் அதனை புளியோரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
Tags :