ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணம் 10% முதல் 21% வரை உயர்வு.
வோடஃபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளன. 28 நாள்களுக்கு ரூ.299 (தினம் 1.5 GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக வோடஃபோன் ஐடியா உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தியிருந்தது குடிப்பிறத்தக்கது.
Tags : ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணம் 10% முதல் 21% வரை உயர்வு.