டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது

by Admin / 20-07-2026 01:38:11pm
டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சியினர் பாராளுமன்றத்தின் முன்பாக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து காவல்துறையினர் தடியடி செய்து அவர்களை கைது செய்தனர்.

நீட் தேர்வு முறைகேடு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  பதவி விலகவேண்டும் என்று டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதை அடுத்து இந்த முற்றுகை பேரணியை அவர்கள் நிகழ்த்தினார். காரணமாக டெல்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமலில் இருந்தாலும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது பாதுகாப்பு கருதி சந்தர் மந்தர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்ற கரப்பான் பூச்சி கட்சியினரை காவல்துறையினர் தடியடை நடத்தி பேரணியில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். என் காரணமாக ஜந்தர் மந்தர் நாடாளுமன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் கடந்த சனிக்கிழமை அன்று சந்தர் மந்தரில் 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டத்தை கரப்பான் பூச்சி கட்சியினர் முன்னெடுத்தனர்.

டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது
 

Tags :

Share via

More stories

Logo