விளாத்திகுளம் தி.மு.க எ.ம்எல்.ஏ கைதுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடும் கண்டனம்
விளாத்திகுளம் தி.மு.க எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதோடு சட்டசபை கதவுகளை மூடினால் எலும்புகளை முறிப்பேன் என்று வன்முறையாக பேசியதன் காரணமாக இன்று அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக துணை பொது செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தம் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இதற்கு முன்பு திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :



















