சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்கள்- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தி கருத்துக்களை கேட்டு வருகிறார். அந்த வகையில் மதுரை மாநகர அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது மதுரை பகுதியைச் சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் ஒருவர் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார் இவரை கேட்ட பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆக்கிரமடைந்து நான் ஏன் பதவி விலக வேண்டும் நடந்து முடிந்த 2026 செப்டம்பர் தேர்தலில் கட்சிக்கு 47 இடங்களை பெற்றுத் தந்தவன் நான் என்று ஆணித்தரமாக தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தினார். அதிமுகவின் தற்போதைய 47 எம்எல்ஏக்கள் முழுமையாக இல்லாமல் ஆறு பேர் தமிழக வெற்றி கழகத்தில் சேரும் பொருட்டு தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இணைந்தனர். இதன் காரணமாக அதிமுக கட்சிக்குள் உட்கட்சி பூசல்கள் வெடிக்க ஆரம்பித்தன. பல்வேறு இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதோடு மாற்று கட்சியில் இணைந்தனர்.
Tags :



















