சபரிமலையில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்

by Staff / 27-09-2022 01:38:38pm
சபரிமலையில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், ஜெயராம் ஆழ்வார்க்கடியானாகவும் நடித்துள்ளனர். இந்த நிலையில் கொச்சிக்கு சென்ற ஜெயம் ரவியும் ஜெயராமும் அங்கிருந்து சபரிமலைக்கு போய் சாமி தரிசனம் செய்தனர். அந்த புகைப்படங்களை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ''பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல் நிஜ வாழ்க்கையிலும் அன்போடு என்னை வழிநடத்தும் குருசாமி ஜெயராமுடன் பம்பையில்" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.

 

Tags :

Share via