திருவண்ணாமலை தீபமலையில் திடீர் தீ விபத்து ஆயிரக்கணக்கான மூலிகை மரம் செடி கொடிகள் எரிந்து நாசம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது கடந்த சில ஆண்டுகளாக மலை மீது பொதுமக்கள் யாரும் ஏறாத வண்ணம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மலை மீது ஏறுபவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மலையின் முன் பகுதியான தீபம் ஏற்றக்கூடிய பகுதியில் சமூக விரோதிகள் மலையில் ஏறக்கூடியவர்கள் தீயை பற்ற வைப்பதால் அடிக்கடி மலை மீது தீ விபத்து ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான மூலிகை மரங்கள் மூலிகைச் செடிகள் பல்வேறு அரியவகையான மரங்கள் என எரிந்து சாம்பலாகி விடுகிறது.
ஆகவே மலை மீது ஏற வனத்துறையினர் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அடிப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 1500 அடிக்கு மேல் பகுதியில் ஏழு சூனை என்று அழைக்கக்கூடிய மலையின் மையப்பகுதியில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு இந்த பரவி மலை மேல என இருந்து வருகிறது.
இதனைக் கண்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வனக் குழுவினர் ஆகியோர் ஒருங்கிணைந்து மலை மீது ஏறி தீனை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கையில் ஈடுபடுத்து வருகின்றனர்.
இன்று பிரதோஷ தினம் என்பதால் மலையே சிவனாக எண்ணி பல்லாயிரக்கணக்கானவர்கள் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றன. புனிதமான இந்த மலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஆன்மீக பக்தர்கள் மற்றும் திருவண்ணாமலை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் வனத்துறையினர் இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : திருவண்ணாமலை தீபமலையில் திடீர் தீ விபத்து ஆயிரக்கணக்கான மூலிகை மரம் செடி கொடிகள் எரிந்து நாசம்.



















