அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை

by Staff / 29-01-2024 04:08:52pm
அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விவேக் சைனி (25) இவர், ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள லிதோனியா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விவேக் சைனி படித்து வந்தார். மேலும் பணத்தேவைக்காக பகுதி நேரமாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்துள்ளார். அப்போது அப்பகுதியில் போதைக்கு அடிமையான ஜூலியன் பவுல்ன்கே என்ற நபருக்கு சூப்பர் மார்க்கெட்டில் தங்க இடம் கொடுத்துள்ளார். நாளடைவில் இவரில் செயல்பாடு அச்சுறுத்தும் விதத்தில் இருந்ததால் இடத்தை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜூலியன் விவேக்கை தான் வைத்திருந்த சுத்தியலால் பலமுறை அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via