பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மதுரையில் கடந்த 11 ஆம் தேதி தனியார் பள்ளியில் படித்து வரும் பள்ளி மாணவன் ஆட்டோ ஓட்டுனருடன் கடத்தப்பட்ட வழக்கில் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முன்னாள் காவலர் செந்தில்குமார், திருநெல்வேலி மாவட்டம் ரகுமான் பேட்டை சேர்ந்த அப்துல் காதர் தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த வீரமணி காளிராஜ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் தொடர்புடையதாக கூறப்படும் சூர்யா என்ற பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்தார்.இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஐகோட் மகாராஜனை தனிப்படை காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கைது செய்ததாக தகவல்
Tags :