வைரவிழா காணும் பாரதி வித்யாலயா
சேலம் மாநகரின் மையப் பகுதியில் கடந்த 75 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. பாரதி வித்யாலயா பள்ளி இந்த பள்ளியில் தற்போது 5 ஆயிரம் மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 1946 ஆம் ஆண்டு 32 மாணவர்களுடன் துவங்கிய இந்த பள்ளி அது தற்போது ஆல்போல் தழைத்து 5ஆயிரம் மாணவர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, கல்வியிலும் மாணவர்களின் ஒழுக்கத்திலும் மிகப்பெரிய ஒரு பங்கை இப்பள்ளி வகித்து வருகிறது.
பாரதி வித்யாலயா பள்ளியில் படித்த மாணவர்கள் தற்போது பல துறைகளில் சாதனை மாணவர்களாக இருந்து வருகின்றனர். யை முதன்முதலில் உருவாக்க பெரிதும் உதவியாக இருந்தவர்கள் ராமசாமி அய்யர் சீனிவாசராகவன், குப்பண்ணா கிருஷ்ணமூர்த்தி, கோபால கிருஷ்ண ராவ், டிவி சுந்தரம் ஐயங்கார், உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பங்களிப்பில் இந்த பள்ளி இன்று கம்பீரமாக வைர விழாவை கண்டுள்ளது.
Tags :