மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்; கடல் மீன்கள் தட்டுப்பாடு!
வங்க கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு தொடரும். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறைவான அளவு படகுகள் கரையோர பகுதிகளில் மட்டுமே மீன்பிடிப்பதால் வரும் நாட்களில் மீன்கள் வரத்து குறையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலையில் விலையும் அதிகரிக்கும் என்பதால் மீன் பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதேசமயம் உள்ளூரில் உள்ள பண்ணை மீன்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :