அகரத்தில் ஏழாம் கட்ட அகழாய்வு... சுடுமண் குழாய் கண்டெடுப்பு...

by Admin / 04-08-2021 12:59:10pm
அகரத்தில் ஏழாம் கட்ட அகழாய்வு... சுடுமண் குழாய் கண்டெடுப்பு...

 


 
சிவகங்கை மாவட்டம் அகரத்தில் ஏழாம் கட்ட அகழாய்வில் சுடுமண் குழாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழடியில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறு, சுடுமண் விளக்கு, மூடியுடன் கூடிய பானை, பானை ஓடுகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. இதுவரை கிடைத்த பொருட்களை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் தற்போது சுடுமண் குழாயை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டு செல்வதற்கு இந்த சுடுமண் குழாய் பயன்படுத்தியிருக்ககூடும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via