காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி ரவுடி கீழே விழுந்து வலதுகைக்கு மாவு கட்டு.

by Editor / 31-05-2024 12:06:45am
காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி  ரவுடி கீழே விழுந்து வலதுகைக்கு மாவு கட்டு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட சிவலார்குளம் பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கடந்த 29.05.24 ம் தேதி அன்று சிவலார்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன்களான மகேஷ்(25), கஜேந்திரன்(22), பெர்லின்(24) மற்றும்  மரிய சுந்தரம் என்பவரின் மகனான நவீன் (27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 29.05.24 - ம் தேதி இரவு நேரத்தில் ஆலங்குளம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர்களான திரு.தங்கதுரை மற்றும் திரு.ஜான்சன் ஆகியோர் இரவு ரோந்து அலுவலில் இருந்த போது அங்கு வந்த மேற்கண்ட கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அண்ணனான கல்யாண சுந்தரம் மற்றும் அவரின் நண்பரான நிர்மல் ஆகியோர் சேர்ந்து பணியிலிருந்த காவல் துறையினரிடம் பிரச்சனை செய்து, அவர்களை அரிவாளால் தாக்க முயற்சி செய்தும் காவலரின் இருசக்கர வாகனத்தை அரிவாளால் சேதப்படுத்தியும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் சிவலார்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகனான கல்யாணசுந்தரம் (27) என்ற குற்றவாளியை போலீசார் காட்டுபபகுதியில் சுற்றி வளைத்த போது தப்பமுயன்று குற்றவாளி கீழே விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டது.அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாவு  கட்டு போட்டு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.மேலும் தலைமறைவாக உள்ள சங்கர பாண்டியன் என்பவரின் மகனான நிர்மல்(28) என்ற குற்றவாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்..

 

Tags : காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி ரவுடி கீழே விழுந்து வலதுகைக்கு மாவு கட்டு.

Share via