திருப்பதியில் நெரிசல்- பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு..
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை மறுநாள்(ஜன.10) சொர்க்கவாசல் திறப்பு.திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன் வாங்க திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்ததால் தள்ளு முள்ளு உருவானது.திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா உள்பட 6 பேர் உயிரிழப்பு; காயம்பட்டவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : திருப்பதியில் நெரிசல்- பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு..