மாட்டிறைச்சியை புசித்த சிவிங்கி புலிகள்

by Staff / 20-09-2022 12:16:28pm
மாட்டிறைச்சியை புசித்த சிவிங்கி புலிகள்

தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் கடந்த 17ம் தேதி சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மத்திய பிரதேசம் குனோ தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள பிரத்யேக பகுதியில் அவற்றை பிரதமர் மோடி திறந்து விட்டார். நமீபியாவில் இருந்து 8,000 கி.மீ. தூரம் வரை கொண்டு வர வேண்டியிருந்ததால், அவை உணவு கொடுக்காமல் இந்தியாவுக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், இந்த 8 சிவிங்கி புலிகளுக்கும் இந்தியா வந்த பிறகு முதல்முறையாக நேற்று முன்தினம் மாலை உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு சிவிங்கி புலிக்கும் தலா 2 கிலோ எருமை இறைச்சி கொடுக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo