63வது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல்
தமிழ் சினிமா ரசிகர்களால் வைகை புயல் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் வடிவேலு இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஹீரோ, காமெடியன், குணச்சித்திர நடிகர், பாடகர் என பன்முக திறமைக் கொண்ட வடிவேலு இன்றும், என்றும் 'மக்கள் கொண்டாடும் மகத்தான கலைஞன்' ஆக உள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருந்த மாமன்னன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் நடிகர் வடிவேலு என கூறலாம்.
Tags :