திமுக எம்.எல்.ஏ.எழிலரசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.

by Editor / 05-11-2023 10:27:39am
திமுக எம்.எல்.ஏ.எழிலரசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.

காஞ்சிபுரத்தில் பிரபல பட்டு சேலை விற்பனை செய்யும் கடையிலும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவினர் வரவழைத்து இரண்டு இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags : திமுக எம்.எல்.ஏ.எழிலரசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.

Share via

More stories