சென்னையில் இயல்பைவிட அதிகம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

by Admin / 28-11-2021 01:17:53am
சென்னையில் இயல்பைவிட அதிகம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

சென்னையில் இயல்பைவிட அதிகம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு  ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்ய  வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று புவியரன் தெரிவித்தார்.

நாளை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய மழைக்கு  வாய்ப்பு 2 நாட்களுக்கு குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் .  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

29 ஆம் தேதி உருவாக உள்ள  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு இருக்காது  சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் அதிக மழை பொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via