ஓமிக்ரான் தொற்று பரவல் பிரதமர் மோடி ஆலோசனை...
ஓமிக்ரான் தொற்று பரவல் பிரதமர் மோடி ஆலோசனை...
புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை மாறுபாடு ஹாங்காங் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு பரவ தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோனா தொற்று அதீத வீரியம் கொண்டது என்பதால் அதனை கவலைக்குரிய தொற்றாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய பகுதிகள் வழியாக வரும் சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் தென் ஆப்பிரிக்க பயணிகளுக்கு தடை விதித்துள்ளது,
ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து ஆலோசிப்பதற்காக
தலைமை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை .
Tags :