நேபாளத்திற்கு உதவிகள் தயார் - பிரதமர் மோடி
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், “நேபாள மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணையாக நிற்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
Tags :



















