மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது காட்டேரி இப்பகுதியில் வசித்து வந்தவர் மெகரூன் (65) என்ற மூதாட்டி இவர் கடந்த ஐந்தாம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை என்று குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் ஆறாம் தேதி குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் மூதாட்டி குடியிருந்த பகுதியில் தேடுதல் பணி நடத்தி வந்தனர்.
மூதாட்டிக்கு பைரோஸ் மற்றும் முபாரக் என்ற மகன்கள் உள்ள நிலையில் மகன்கள் இருவருமே வெளியூரில் வேலை செய்து வருவதால் மூதாட்டி அவருடைய தாயார் உடன் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர் நேற்று மாலை அவரது மூத்த மகன் பைரோஸ் (48) தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள புதர் பகுதியில் தேட சென்றுள்ளார் அப்பொழுது மூதாட்டி இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது அவரது மகன் சடலத்தை தொட்ட பொழுது மின்சாரம் தாக்கி பைரோஸ் உயிரிழந்தார் முதற்கட்டமாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வனத்துறையினர் பைரோசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் பின்பு அடர்ந்த புதர் பகுதியில் இருந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது மேலும் அடர்ந்த புதர் மண்டிய பகுதி என்பதால் உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததும் விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி உயிரிழந்ததும் அவரை தேடிச் சென்ற மூத்த மகன் உயிரிழந்ததும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags : மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி.