மாநில அரசுகள் ஏற்கனவே அளித்து வரும் இலவச மின்சாரத்தை தொடரலாம் என மத்திய அரசு விளக்கம்

தற்போது இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள் அல்லது மானிய விலையில் மின்சாரம் பெறுபவர்கள் தொடர்ந்து பெறலாம் என்று மத்திய மின் துறை செயலாளர் அலோக் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் புதிய மின்சார சட்டத்தில் இலவச மின்சாரம் என்று குறிப்பிடப்படவில்லை என்றபோதும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அல்லது நுகர்வோர் மானியம் வழங்கலாம் என்ற பிரிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். புதிய மசோதா மாநிலங்கள் அல்லது இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முன்மொழிகிறது என்பது உண்மை அல்ல என்று விளக்கமளித்துள்ளார்.
Tags :