மாமியார் டார்ச்சர்.. குழந்தையை தனியே விட்டு பெண் தற்கொலை

by Editor / 24-04-2025 04:39:19pm
மாமியார் டார்ச்சர்.. குழந்தையை தனியே விட்டு பெண் தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா லட்சுமி என்ற பெண், தனது ஒரு வயது மகனை விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரசன்னா லட்சுமி 2023ஆம் ஆண்டு காந்தாரி திருப்பதி என்ற நபரை திருமணம் செய்தார். கடந்த சில நாட்களாக கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனை தாங்க முடியாத அப்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, அங்கிருந்த கண்ணாடியில், “எனது மகனை பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்” என எழுதி வைத்துள்ளார்.

 

Tags :

Share via