கொல்லம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.

by Editor / 04-06-2023 09:26:32pm
கொல்லம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் 14 கோச்சுகளுடன் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில்  இந்த ரயில் புனலூர் வழியாக செங்கோட்டை நோக்கி வரும்பொழுது ரயிலின் அடிச்சட்டம் திடீரென உடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக s3 பெட்டியை பகவதிபுரம் வரும்பொழுது பயணிகள் மற்றும் ஊழியர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் மாற்று ரயில்பெட்டியை தயார் செய்து செங்கோட்டைக்கு அந்த ரயில் வந்தவுடன் அந்த எஸ்.3 ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரையும் மாற்று பெட்டியில் சென்னைக்கு ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு அந்த பெட்டியை மட்டும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கழட்டிவிட்டு உள்ளனர். இதனை சரியான நேரத்தில் கண்டுகொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி 290 பேர் பலியான நிலையில் அந்தக் கோரச் சம்பவம் நடைபெற்ற ஈரம் காய் முன் கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாகசென்னைக்கு இயக்கப்பட்ட ரயிலில் அடிச்சட்டம் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதிய அளவு தென்னக ரயில்வேயில் ரயில் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாகி விட்ட தாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.


 

 

Tags :

Share via