ரயில் இன்ஸ்சூரன்ஸ் - 10 லட்சம் இழப்பீடு

ஐஆர்சிடிசி ரயில்வே பயணக் காப்பீட்டுத் திட்டம் மூலம் பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே வெறும் 35 பைசா செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு பணம் கிடைக்கும். இந்த காப்பீடு திட்டத்தை ஐஆர்சிடிசி வழங்குகிறது. இதன் படி பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின் போது தங்கள் மதிப்புமிக்க பொருட்களை இழக்கும் போது இழப்பீடு பணத்தை பெறலாம். ரயில் பயணத்தில் விபத்து ஏற்பட்டால், பயணிகளுக்கு சிகிச்சைக்கான செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அதே போல விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், நாமினிக்கு இழப்பீடு பணம் வழங்கப்படும்.
Tags :