மது அருந்தியதை தட்டிக் கேட்ட ஆசிரியர்.. பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி

by Editor / 26-06-2025 04:05:42pm
மது அருந்தியதை தட்டிக் கேட்ட ஆசிரியர்.. பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக சையது முகமது என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், பள்ளி அருகே மது அருந்திக்கொண்டிருந்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு, போதையில் இருந்த இளைஞர்கள், ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி, கொலை செய்ய முயன்றுள்ளனர். உடனடியாக அந்த ஆசிரியர், பெட்ரோல் மற்றும் தீப்பெட்டியை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பெட்ரோல் பட்டு எரிச்சல் ஏற்பட்டதால் ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

Tags :

Share via