போதைப்பொருள் கடத்தியவர்களின் சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தியவர்களின் ₹18 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார். தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கையின் எதிரொலியாக, 2022ல் 28, 383 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 14, 934 பேர் கைது செய்யப்பட்டனர். இது 2019ம் ஆண்டை விட 154 மடங்கு அதிகம். 2023ல் 14, 770 பேர் மீது 10, 256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் மட்டும் 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2099 கிலோ கஞ்சா, 8038 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், போதைப் பொருள் சார்ந்த மருந்துகளை சிலர் சாப்பிட தொடங்கியுள்ளனர். இதனால், போதை மாத்திரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2021ல் 11133, 2022ல் 63848, 2023ல் 39910 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் 825 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :



















