பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீசார் விசாரணை

by Staff / 08-03-2024 12:47:08pm
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீசார் விசாரணை

ஆவடி அருகே பள்ளி மாணவிக்கு திருமண ஆசைவார்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தும், தங்கச் சங்கிலி மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை பறித்து தலைமறைவான வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஆவடி அருகே திருநின்றவூரைச் சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், பட்டாபிராமில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், ஒரு தனியார் நிறுவன ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இதற்கிடையே 15 வயது பள்ளி சிறுமிக்கு முகநூல் மூலமாக திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த அருண்குமார்(24) என்ற வாலிபருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த அருண்குமார், அம்பத்தூர் அருகே பாடியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 15 வயது பள்ளி சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை தனியே வெளியே அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அருண்குமாரை தீவிரமாக  தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

 

Tags :

Share via

More stories