நடிகர் கார்த்திக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு

by Staff / 06-04-2024 11:42:50am
நடிகர் கார்த்திக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு

நடிகர் கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் மனித உரிமை காக்கும் கட்சி சார்பில் யாரும் போட்டியிட முன்வரவில்லை. இந்த நிலையில் மக்களவைப் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ள நடிகர் கார்த்திக் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 8 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்த நடிகர் கார்த்திக், 2009ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வந்தார்.தொடர்ந்து 2018ஆம் ஆண்டு கட்சியை கலைத்துவிட்டு, மனித உரிமை காக்கும் கட்சி என்ற புதிய பெயரில் கட்சி நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo