தமிழக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் (கடந்த 24 மணிநேரத்தில்) ஒரேநாளில் 35,579 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 17,34,804 ஆக உயர்ந்துள்ளது. 397 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 19,131 ஆக உயர்ந்துள்ளது. 25,368 பேர் பூரண நலன் பெற்றதை தொடர்ந்து, மொத்த பூரண நலன் பெற்றோரின் எண்ணிக்கை 14,52,283 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 6,073 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,62,428 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 2,092 பேருக்கும், கோவையில் 3,335 பேருக்கும், ஈரோட்டில் 1,505 பேருக்கும், மதுரையில் 1,269 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 858 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,096 பேருக்கும், திருவள்ளூரில் 1,791 பேருக்கும், திருப்பூரில் 1,573 பேருக்கும், தூத்துக்குடியில் 1,004 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பல மாவட்டங்களில் கொரோனா உச்சகட்டத்தை எட்டிவரும் நிலையில், தமிழக மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாவட்ட வாரியாக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது கொரோனா பரவலால் உறுதியாகியுள்ளது.
Tags :