பேச்சுவார்த்தை சுகமாக முடிந்ததாகவும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் .

by Admin / 09-01-2026 06:00:58pm
பேச்சுவார்த்தை சுகமாக முடிந்ததாகவும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் .

 இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினாா் நாகேந்திரன் 30 நிமிடங்கள் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பாஜக தரப்பிற்கு 56 தொகுதியில் வரை கேட்கப்பட்டதாகவும் அதிமுக 170க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும் தகவல்.

இதற்கிடையேபேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன் பேச்சுவார்த்தை சுகமாக முடிந்ததாகவும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இம்மாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது குறித்தும் அவர் பங்கேற்கும் கூட்டத்தை சென்னை அல்லது மதுரையில் நடத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது மற்றும் ஏற்கனவே இணைந்த பாமக போன்ற கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தை சுகமாக முடிந்ததாகவும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் .
 
Tags :

Share via