பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
ர்பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இன்று காலை தனது அமைச்சரவையின் கடைசி கூட்டத்திற்கு பிறகு அவர் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நாலு மணி அளவில் நடைபெற உள்ளது .இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சர் முறைப்படி அறிவிக்கப்படுவார். புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் நித்தியானந்த ராய் மற்றும் ரேணுதேவி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. புதிய அரசு நாளை பதவி ஏற்கலாம் என்று தெரிகிறது.
Tags :













.jpg)





