ஐ- பி ஏ சி மேற்கு வங்க தேர்தல் வியூக நிறுவன இயக்குனர் வினேஷ் சந்தேல் கைது.
மேற்கு வங்கத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐ- பி ஏ சி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான வினேஷ் சந்தேல் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 10 நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை 2020 ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும். மேற்கு வங்கத்தின் ஈஸ்டன் கோல்.'.பீல்ட்ஸ் லிமிடெட் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி திருடப்பட்டதாக கூறப்படும் வழக்கில் ஹவாலா முறையில் சுமார் 20 கோடி முதல் 50 கோடி வரை ஐபிஎஸ்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. ஐ-பி ஏ சி தேர்தல் வியூக நிறுவனமாக செயல்படுகிறது. இது மம்தா பானர்ஜி திரிணாமூல் கட்சிக்கு பணியாற்றி வரும் நிறுவனம் ஆகும். மேற்கு வங்கத்தில் 23 மற்றும் 29 ஆகிய இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த கைது நடவடிக்கை மம்தா பானர்ஜியின் அரசியலுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திருநா முள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் செய்யப்படும் இந்த நடவடிக்கை ஜனநாயக ரீதியிலான கட்சிகளுக்கு விடுக்க கூடிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags :


















