திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வரும் மே 11, 12 தேதிகளில் சித்ரா பெளர்ணமியை ஒட்டி, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கிரிவலப்பாதையில் குடிநீர், கழிவறை வசதி, அன்னதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Tags : திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி