ஆசியா-ஐரோப்பாவின் முக்கிய கப்பல் பாதைக்கு அருகிலுள்ள

by Admin / 17-08-2022 07:08:29am
  ஆசியா-ஐரோப்பாவின் முக்கிய கப்பல் பாதைக்கு  அருகிலுள்ள

இந்தியாவின் எதிர்ப்பின் காரணமாக, பல நாட்கள் தாமதத்திற்குப் பிறகு, சீன இராணுவ ஆய்வுக் கப்பல் நேற்று  இலங்கையின் ,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

விண்வெளியில் உள்ள பொருட்களை கண்காணிப்பதற்கான யுவான் வாங் 5-ஐ இணைக்கும் பணியை இந்தியா எதிர்த்தது,  ஆசியா-ஐரோப்பாவின் முக்கிய கப்பல் பாதைக்கு  அருகிலுள்ள துறைமுகத்தை   சீனா  ராணுவ தளமாக  பயன்படுத்தக்கூடும்   என்று   இந்தியா  அஞ்சுகிறது .பலஆண்டுகளாக  மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை ,இந்தியா மற்றும் சீனா ஆகிய  இரு நாடுகளின் ஆதரவு தேவைப்படும் ௯ழலில் இலங்கை, ஆகஸ்ட் 11 முதல் அம்பாந்தோட்டையில்  ஐந்து நாட்கள்  எரிபொருள் நிரப்புவதற்கு   கப்பலுக்கு அனுமதி வழங்கியது. கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு சீனாவிடம் பின்னர் கேட்டுக் கொண்டது.அந்நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்  நிறுத்தப்பட்டது.

 

Tags :

Share via

More stories