ஒருமுறை சார்ஜ் செய்தால் 7நாட்கள் வரை..

by Staff / 13-04-2023 05:29:34pm
ஒருமுறை சார்ஜ் செய்தால் 7நாட்கள் வரை..

இந்தியாவில் மின்சாதன பொருட்களை மக்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். குறிப்பாக மார்ட்போன்,மடிக்கணினி,டேப்லட் இதன் வரிசையில் தற்பொழுது ஸ்மார்ட் வாட்ச் பிரியர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பு நிறுவங்களில் ஒன்றான போல்ட் தனது போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்துள்ளது. 1.43 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சமாக150க்கும் மேற்பட்ட வாட்ச் தீம்களை கொண்டுள்ளது. கேம்கள்,வானிலை விவரம்,நினைவூட்டும் அம்சம் என பல வசதிகளை கொண்டுள்ளது. ஒரு நாள் சார்ஜ் செய்தால் 7நாட்கள் வரை நீடிக்கும் திறன் படைத்தது. போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.2499 ஆகும்.

 

Tags :

Share via

More stories